நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி சூரிய குடும்பத்தில் உள்ளது.
என்னடா இது புதுக்குடும்பமா இருக்கு. நம்மளுக்கு தெரிஞ்சதெல்லாம் நேருவோட குடும்பம் காந்தியோட குடும்பம், நம்மளோட குடும்பம் மட்டும்தான. இது என்னடா புதுக்குடும்பம்னு நெனக்காதீங்க. நம்ம குடும்பத்த மாதிரி சில கோடி கோடிக் குடும்பங்களோட இயக்கத்துக்குக் காரணமா இருக்குறது இந்த சூரியக் குடும்பந்தான். இந்த குடும்பத்துல யார் யாருப்பா இருக்கா? அது என்ன சூரியக் குடும்பம்னு பேரு?சூரியன் இருக்குல்ல, அதையும் அதைச் சுத்திக்கிட்டு இருக்குற ஒன்பது கோள்களையும் சேர்த்து சூரிய குடும்பம்னு சொல்றாங்க. அதான பார்த்தேன் நான்கூட நம்ம சூர்யாவோட குடும்பத்த பத்திதான் பேசுரியாக்கும்னு நினைச்சேன்.ஒவ்வொரு கோளும் தன்னைத்தானே சுத்திக்கிட்டு சூரியனையும் சுத்திக்கிட்டு வருது தெரியுமா?நம்ம ஊரு ஆட்டுத்தாடிகளும் கோரைமுடிகளும் கோயிலச் சுத்திவர்ர மாதிரின்னு சொல்லு.ஆமா அப்படியும்கூட வச்சிக்கிடலாம். அதோட எல்லாப் பிரச்சனைகளுக்கும் சினிமாவுல தீர்வு கெடைக்குமுன்னோ, இல்லையின்னா டாஸ்மார்க் கடையையோ சுத்திக்கிட்டுத் திரியிதே அந்த ஜென்மங்களயும் சேத்துக்கலாம். உனக்குப்புரியிற மாதிரி எப்படியாவது வச்சுக்க. ஒவ்வொரு கோளும் தனக்கே உரிய நீள் வட்டப் பாதையில சூரியன சுத்தி வருது.
அப்படி சுத்தரனால மோட்சம் கீட்சம் கிடைக்கும்னு யாராவது சொல்லியிருப்பாங்க.
சொல்றதக் கேளு. சூரியன் வெடிச்சு, சிதறனு துண்டுகள்தான் கோள்கள்னு சொல்றாங்க.
அப்ப பூமி வெடிச்சுதான் நிலா வந்துச்சுனு சொல்றியா?
இருக்கலாம். அறிவியலே ஒரு மாதிரி அனுமானத்துலதான ஓடிக்கிட்டு இருக்கு. பழைய வரலாறுகளுங்கூட அப்படித்தான். ஆனா என்ன ஒன்னு எந்த அனுமானமா இருந்தாலும் அதுக்குள்ள ஒத்துக்கற மாதிரி ஒரு தர்க்கம் இருக்கனும். சரி விஷயத்துக்கு வருவோம்.. இப்ப பூமி தான் சுத்திகிட்டு இருக்குற பாதையைவிட்டு விலகி செவ்வாய் கிரகம் சுத்திகிட்டு இருக்குற இடத்துக்குப் போயிருச்சுனா என்னாகும்?
என்னப்பா இப்படி அமெரிக்கா போடுற குண்டையெல்லாம் விட பெரிய குண்டா போடுற.
சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்றேன். அப்படி பூமியும் செவ்வாயும் தங்களது சுற்றுப் பாதைகளை மாத்திக்கிதுன்னு வச்சுக்கோ, என்ன ஆகும்.
தெரியலப்பா. நீயே சொல்லு.
அதப் பத்தி தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னால நீ சில விதிகளைப்பத்தி தெரிஞ்சிக்கனும். மண்டைக்குள்ள இருக்குர விதியெல்லாம் போதாதுன்னு இது வேறயா. எல்லாம் எந் தலைவிதி.
ஒரு பொருள் வட்டமான பாதையில சுத்துதுன்னு வச்சுக்கோ, அத சுத்த வைக்கிற சக்தி ஒன்னு அதாம்ப்பா சூரியன், கொஞ்ச தூரத்துல இருந்து செயல்பட்டுக்கிட்டு இருக்கு.
சரி அதுக்கும் பூமி பாதையை மாத்தி சுத்துறதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்காப்பா?
இருக்கு. இப்ப பாதைய மாத்திச் சுத்துறதால சூரியனுக்கும் பூமிக்கும் இடையில இருக்குற தூரம் அதிகமாயிருமுள்ள.
அதனால என்னப்பா ஆகும்.
என்ன ஆகும். பூமி தன்னைத்தானே சுத்துகிற வேகம் அதிகரிக்கும்.
அது எப்படிப்பா?
நீ எதாவது செய்றன்னு வச்சுக்குவோமே, உன்னை நான் பக்கத்துல இருந்து ஒருமாதிரி கட்டுப்பாடாச் செய்யிற மாதிரி பாத்துக்குறேன், பிறகு கொஞ்சந்தள்ளி நின்னு பாத்துக்குரேன், நீ இப்ப என்ன செய்வ?
அந்த செயலை வேகமா செய்வேன்ப்பா. ஒன்னய மாதிரி ஆளுன்னா ஒருபயலும் பாக்கலயின்னு நீ பாட்டுக்குத் தூங்கிருவ.
விட்டா நீ என்னையே வாருவயே. சரிவிடு பூமியும் ஒன்னய மாதிரிதாப்பா. பூமி வேகமா சுத்தும்.
புரியுது புரியுது. பூமி என்னய மாதிரி யாரும் கட்டுப்படுத்தலயின்னா சுறுசுறுப்பாயிருமுன்னு சொல்லு. அதுசரி வேகமா சுத்துனா என்ன ஆகும்ப்பா?
ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணிநேரங்கிறது குறையும். நாளெல்லாம் வேகமாப் போகும்.
ஆமா. பூமி வேகமா சுத்துறதுனால வேகமா குளிர்ச்சியடையனும். அதேபோல சூரியன்ல இருந்து தூரமாப் போனதால அதுல இருந்து வர்ற வெயிலும் கம்மியா வரும். அப்புறம் நம்ம ஊர்ல எல்லாம் பனியா விழும்னு சொல்றியாப்பா.
நாம எல்லோரும் அப்படித்தான் நெனச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா அதுதான் இல்ல. பூமிக்கு ஆயிரம் அடி மேல போனா பத்து டிகிரி வெப்பம் குறையும்னு தெரிஞ்ச நமக்கு அதே தூரம் பூமிக்கு அடில போனா 20 டிகிரி வெப்பம் கூடுதுங்கிறது தெரியல.
சரி அப்ப பூமி என்னதான் ஆகும்.
பூமிக்கு உள்ளார அதாவது மையப் பகுதில எரி குழம்புகள் இருக்குதுன்னு தெரியும்ல உனக்கு.
அப்படியாப்பா. நம்ம பொராட்டாக்கட அன்னன் அந்த கொழம்ப எப்படி விட்டு வச்சாருன்னு தெரியலப்பா.
தின்றதுலயே நெனப்பா இரு. பூமி குளிர்ந்தாலும் உள்ள இருக்குற குழம்பு எல்லாம் வெடிச்சு செதறி வெளில வரும்.
எங்கெல்லாம்ப்ப்பா வெடிக்கும் . பாலைவனம் , ஆறு இந்தமாதிரி இடத்திலெல்லாம் மண் கெட்டியா இருக்காது. அந்தமாதிரி இடமெல்லாம் எரி மலையா மாறும்.
அய்யய்யோ நம்ம ஊருக்குப் பக்கத்துலயும் குண்டாறுன்னு ஒன்னும் கைசிகா நதின்னு ஒன்னும் வைப்பாறுன்னு ஒன்னும் ஏகப்பட்ட ஆறு இருக்கேப்பா. அப்புறம்.
பூமியோட வெப்பம் கூடும். அதுபோக பூமியோட ஈர்ப்பு விசை குறையும். அதனால பூமியச் சுத்தி இருக்குற காற்று மன்டலம் விரிவடையும். அப்படி விரிவடையும் போது ஓசோன் படலம் நீர்த்துப் போகும். அதாவது இடைவெளிவிழ ஆரம்பிக்கும். அதனால அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமியை அதிகமா வந்தடையும். பூமியின் மேற்பரப்பின் வெப்பம் சில மடங்கு கூடும்.
அப்புறம் பூமி வேகமா சுத்துறனால குளிர்ந்து போயிரும்னு நீதானப்பா சொன்ன. இப்ப வெப்பம் கூடும்னு சொல்ற.
ஆமா பூமியோட வெப்பம் உண்மையில் குறையும் . ஆனா அதோட வெளிப்பரப்பு வெப்பம் கூடும். ஏசி ரூமுக்குள்ள இருந்து வெளில வந்தா எப்படி இருக்குமோ அப்படித்தான் நாம உணர்வோம்.
மொதல்ல இதெல்லாம் நடக்கக் கூடாதுன்னு போய் சாமிகிட்ட வேண்டிகிட்டு வந்துடரேன்ப்பா.
உங்கள எல்லாம் திருத்தவே முடியாதப்பா?
**********
கல்லூரியில் படிக்கும் போது ஆசிரியர் , கேட்ட ஒரு கேள்விக்கு பதிலை நான் இப்படி எழுதிக் கொடுத்தேன்.. இதைப் பார்த்த ஆசிரியர் ஒரு வார்த்தையும் பேசாமல் சென்றுவிட்டார்… இதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும்.
என்ன் பின்னூட்டம் காணாமே ?
(
பாலா… சில செட்டிங்ஸ் பிரச்சனையால ..பின்னூட்டம் தெரியல..சரி..பண்ணிட்டேன்.
hi
This is very esay to all for understand.i want last of this story.apram பின்னூட்டம் ina enna ?.
அட!!
நல்லாயிருக்கே!!!
அறிவியல் பத்தி எழுதறாங்கன்னு சொன்னாலே என் கண்கள் பளிச்சடையும்!!
இது போல நானும் விண்வெளி பத்தி ஒரு தொடர் எழுதியிருந்தேன்!
நேரம் கிடைத்தால் கொஞ்சம் பாருங்க!!
வாழ்த்துக்கள்!!
rompa nalla eruthathu