இரவு மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.தனது இருக்கையில் இருந்து எழுந்து அவன் நடந்தான்.சுவர் முழுக்க ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்ட ஒரு அறைக்குள் நுழைந்து சற்று நிதானித்தான்.அந்த அறையில் இவனுக்குத் துணையாக ஒரு காபி மெசினும் பல இருக்கைகளும் இருந்தன.அந்த இருக்கைகளெல்லாம் சாதாரன இருக்கைகளை விட சற்று உயரம் அதிகம்.ஒரு ஆளினுடைய இடுப்பளவுக்கேனும் இருக்கும் அவற்றின் உயரம்.அதில் உட்கார்ந்துதான் இவன் மதிய உணவை சாப்பிட்டாக வேண்டும்.மிகுந்த சிரமப்பட்டுதான் அவன் அந்த இருக்கையில் ஏறி அமர்வான்.பிறகு மார்பளவுக்கும் இடுப்பளவிற்கும் நடுஅளவு வரை உயரம் இருக்கும் ஒரு மேசை போன்ற அமைப்பில் டிபன் பாக்சை எடுத்து வைத்துக் கொண்டு தான் கொண்டு வந்த உணவை உண்பான்.அந்த அமைப்பு அறையில் ‘ட‘வடிவம் போல் வியாபித்திருக்கும். அங்கும் இங்குமாக ஒரு சனத்திரல் போல் இருந்த இருக்கைகளை தள்ளி வைத்துக் கொண்டே அவன் முன்னேறி மேசை போன்ற அமைப்பின் அருகில் வந்தான்.அந்த அமைப்பின் கீழே உள்ள இடத்தில் பைகள் வைத்திக் கொள்வதற்கான பொந்துகள் போன்ற அமைப்பும் இருக்கும்.இவனுக்கு அதனைப் பார்க்கும் போதெல்லாம் சிறு வயதில் ஒரே ஒரு முறை உள்ளே சென்று பார்த்த ஒரு ஆள் அளவு உயரமுள்ள புறாக் கூண்டுதான் முதலில் ஞாபகம் வரும். காலையில் வந்தவுடன் வைத்த தனது பையை ஒரு பொந்தில் இருந்தும் தனது கெல்மெட்டை ஒரு பொந்தில் இருந்தும் எடுத்தான்.அந்த பை நல்ல கருப்பு நிற பை.அந்தப் பையில் ஒரு நோட்டும் டிபன் பாக்சிம் தான் இருக்கும்.ஆனால் பையின் அளவோ மிகப் பெரியது.பையில் தொங்கிய கடிவாளம் போன்ற வாரை எடுத்து தனது தோள்பட்டையில் போட்டுக் கொண்டான்.ஒரு இருக்கையின் மேல் உலர்வதர்க்காக போட்டிருந்த தனது ஜெர்க்கினை எடுத்து தனது முன்னங்கையில் ஒரு துண்டை கயிறில் காயப்போடுவதைப் போல போட்டுக் கொண்டான்.கெல்மெட்டில் தாடையில் மாட்டுவதற்காக உள்ள கயிற்றை இன்னொரு கையால் பிடித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினான்.கனிணிகளுக்கு நடுவே சின்னச் சின்னத் தெருக்கள் போல இருந்த வழியாக நடந்து சென்று கண்ணாடியால் ஆன முகப்புக் கதவை அடைந்தான்.செக்கூரிட்டி இவன் வெளியே செல்லும் நேரத்தைக் தான் வைத்திருந்த ஒரு தாளில் குறித்துக் கொண்டார்.கதவைத் திறந்து வெளியே வந்தான்.அது ஒரு மூன்று மாடிக் கட்டடம்.தனக்கு வலப் புறமாக இருந்த லிப்ட்டில் கீழே போய் விடலாம் என்று லிப்டின் அருகே சென்றான்.லிப்டின் கதவுகளுக்கை சற்று இடப் புறமாக லிப்ட் எந்த மாடியில் இருக்கிறது என்பதை குறிக்கும் ஒரு டிஸ்ப்ளேயும் அதன் கீழே ஒரு சுவிட்சும் இருந்தது.டிஸ்ப்ளேயில் ஒரு அம்புகுறி மேல் நோக்கி இருந்தது.அதன் கீழே மூன்று என்று சிவப்பில் தெரிந்தது.அவன் ஜெர்க்கினைப் போட்டிருந்த கையால் கருப்புக் கலரில் இருந்த சுவிட்சை அழுத்தினான்.லிப்ட்டின் கதவுகள் திறந்து இவனுக்காக வழி விட்டன.லிப்டிக்கிற்குள் நடந்து சென்று திரும்பி நின்று கொண்டான்.கதவிற்கு வலப் பக்கம் இருந்த சுவிட்சுகளில் தரை தளத்திற்குச் செல்லுவதற்காக ‘D’என்று போடப் பட்டிருந்த சுவிட்சை அழுத்தினான்.மெல்ல மெல்ல லிப்ப்ட்டின் கதவுகள் மூடின.அவனது பார்வையில் இருந்து அந்த கண்ணாடிக் கதவுகள் மெல்ல மெல்ல மறைந்தன.லிப்ட் கீழே இறங்க்த் தொடங்கியது.லிப்ட்டில் பயனிப்பது இவனுக்கு சற்று பயம் தரக்கூடிய விசயம் தான்.திடீரெனெ இரண்டு தளங்களுக்கு நடுவில் நின்றுவிட்டால் என்ன ஆகும்?என்ற பயம் அவனுக்கு எப்போதுமே உண்டு.லிப்ட் தரை தளத்தை அடைந்தவுடன் கதவுகள் தானாகத் திறந்து கொண்டன்.அவன் கம்பீரமாக நடந்து வெளியேறினான்.
எப்போதும் அவனுடன் வரும் அலுவலக நண்பர் அன்று வேகமாகவே ஜகா வாங்கி இருந்தார்.அவர் இருந்திருந்தால் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டே படியில் இறங்கினான்.காற்று நல்ல இதமாக வீசிக்கொண்டிருந்தது.கையில் வைத்திருந்த ஜெர்க்கினை எடுத்து போட்டுக் கொண்டான்.மெதுவாக நடந்து சென்று தனது பைக்கை எடுத்து அதன் மீது அம்ர்ந்தான்.தன்னுடைய கெல்மெட்டையும் கன்னாடியையும் சரி செய்து கொண்டான்.இன்னும் பதினைந்து கிலோமீட்டர் போயாக வேண்டும்.டிராபிக் இல்லைனா அரைமநேரத்துல போயிரலாம்.இல்லைனா ஒன்றமநேரம் ஆகும் என்று அலுத்துக் கொண்டே பைக் கிக்கரை உதைத்தான்.காலை ஒன்பது மணியில் இருந்து இவனுக்காக காத்துக் கொண்டிருந்த பைக் மிகுந்த உற்சாகத்துடனும் மிக மிக கவனமாகவும் மைலாப்பூர் ராதாகிருஷ்னன் சாலையில் இறங்கி ஓடத் தொடங்கியது.ராதாகிருஷ்னன் சாலை ஞாயிற்றுக் கிழமையைத் தவிர மற்ற நாட்களில் அவ்வளவு நெருக்கடியாக இருக்காது.ஞாயிற்றுக் கிழமை அந்த சாலை நெருக்கடியோடு இருப்பதற்குக் காரணம் அது தான் மெரினா கடற்கரைக்குச் செல்லக்கூடிய பிரதான சாலை.அந்தச் சாலையில் உள்ள முதல் இரண்டு சிக்னல்களை சிரமில்லாமல் கடந்த அந்த பைக் அடுத்தபடியாக வந்த ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கியது.இறங்கி சிறிது தூரம் சென்றவனுக்கு பயங்கர எரிச்சல்.அந்த சாலையில் வண்டிகள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.அவனும் அவனது பைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வண்டிகளுக்கு நடுவில் கிடைத்த சந்துகளில் நுழைந்து சிறிது தூரம் முன்னேறினர்.மேலே செல்வதற்கு எந்த வண்டியும் வழி ஏற்படுத்திக் கொடுக்காததால் அப்படியே பைக்கை நுறுத்தினான்.சுற்றிலும் விதவிதமான வண்டிகள்.கார்களில் தான் எத்தனை தினுசு கார்கள்.பெரியதும் சின்னதுமாய்.கலர் கலராய்.அவனுக்கு சற்றுதள்ளி முன்னாள் நின்றிருந்தது அந்த மாநகரப் பேருந்து.இத்தனை கலர் கலர் கார்களுக்கு நடுவில் ஒரு அப்பாவியாக பயணிகள் நிரம்பி வழிந்த்தனால் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு ஒரு விதமாக நின்று கொண்டிருந்தது.அப்போது மழை லேசாக தூரத் தொடங்கியது.தன்னைப் போன்ற பைக்காரர்கள் சிலர் மக்கள் நடப்பதற்காக போடப் பட்டிருந்த ப்ளாட் பாரத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றனர்.சே!இப்படி வந்து மாட்டிக் கிட்டோமே என்று தனது திறமையை நினைத்து நொந்தான்.முன்னால் இருந்த வண்டிகளெல்லாம் மெதுவாக நகரத் தொடங்கின.இவனது பைக்கும் மெதுவாக முன்னேறத் தொடங்கியது.ஜெமினி பாலத்தின் அடியில் சென்று பாம்குரோவ் சிக்னலில் வந்து மீண்டும் நின்றது பைக்.அந்த சிக்னலில் இருந்து இடப்புறமாகத் திரும்பி அப்படியே நேராக ஒரே அடி அடித்தால் வடபழனி.வடபழனியில் இருந்து ஒரு அரைமணி நேரம் ஆகும் போரூருக்கு.அங்குதான் இவன் செல்ல வேண்டும்.மழையில் சொட்டுகள் சற்று பெரிதாக விழ ஆரம்பித்தன.சரியாக சிக்னலும் பச்சைக்கு மாறியது.எல்லா வண்டியும் ஒரு மூர்க்கத்தனத்துடன் பாய்ந்தன.இவன் இடதுபுறமாக திரும்பி சற்று ஓரமாக பைக்கை நிறுத்தி ஜிர்க்கின் ஜிப்பை மேலே இழுத்து விட்டான்.பிறகு மெதுவாக பைக் நகர நகர மழை வழுத்துக் கொண்டே சென்றது.அன்று காலையில் பெய்த ஒரு ஒரு மணி நேரத்து மழைக்கு சென்னை ஸ்தம்பித்துப் போனது தான் உண்மை.சென்னை உள் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை.எல்லா இடத்திலேயும் தண்ணீர் தேங்கி நிற்கும்.வண்டிகள் சாலையில் செல்வதே பெரும் சிக்கலாக இருக்கும்.சென்னையின் பிரதான சாலைகளில் வண்டி ஓட்டுவதென்பதே ஒரு பெரும் வீரச் செயல்தான்.அதிலும் மழை பெய்கின்ற வேலைகளில் வண்டி ஓட்டுவதென்பது வீராதி வீரச் செயல்.அவன் கூடவே போட்டி போட்டுக் கொண்டு வந்த வாகனங்கள் எல்லாம் எங்கே போனதென்றே தெரியவில்லை.அந்தச் சாலையில் இவனது பைக்கும் ஒரு சில கார்களும் மட்டுமே சென்றன.இவனுக்கு மழையும் மழைத்துளிகளின் வழியாக சிதறும் ஒளிதான் தெரிந்தது.மற்றபடி சாலையெல்லாம் மிகத் தெளிவாகத் தெரியவில்லை.ஒரு தோராயமாகத்தான் அந்த பைக் போய்க்கொண்டிருந்தது.எப்படியோ பத்திரமாக வள்ளுவர் கோட்டத்தை வந்தடைத்தது அந்த பைக்.
வள்ளுவர் கோட்டத்தில் இருந்து நேராகச் சென்றால் கோடம்பாக்கம் பிரிட்ஜ்.அதுதான் எப்போதும் டிராபிக் நிறைந்ததாகவே இருக்கும் .அந்த பாலத்தைக் கடப்பதற்கு எப்படியும் குறைந்தது கால் மணி நேரம் ஆகும்.மிக உறுதியுடன் அந்த பைக் கொட்டும் மழையில் கோடம்பாக்கம் பிரிட்ஜை அடைந்தது.அந்த பாலத்தில் ஏறுவதற்கு எப்போதும் டி-நகருக்கு உள்ளே சென்று பிறகு தான் ஏற முடியும் .அது ஒன் வே.வள்ளுவர் கோட்டம் சாலையில் இருந்து நேராக செல்ல முடியாது.அந்த வழியில் இன்னோர் பாலம் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் கன ரக வாகனங்களை மட்டும் அனுமதித்திருந்தார்கள் நேராகச் சென்று ஏறுவதற்கு.அவன் ஒரு பேருந்தின் பின்னாலே சென்று நேராகவே பாலத்தில் ஏறிவிட்டான்.மழையும் நன்றாகவே குறைந்திருந்தது.இப்போது லேசான தூரல் மட்டுமே விழுந்து கொண்டிருந்தது.பாலத்தில் இருந்தி இறங்கிய பைக் முன்னேறியது வடபழனியை நோக்கி.அவன் வடபழனிக்கும் கோடம்பாக்கத்துக்கும் இடையில் இருந்த இரண்டு சிக்கனல்களையும் பிரச்சனை இல்லாமல் வெகு சுலபமாகவே கடந்து முன்னேறினான்.வடபழனியில் இருந்து அவன் ஆற்காடு சாலைக்குள் செல்ல வேண்டுமானால் அசோக் நகருக்குள் சென்று வெளியே வர வேண்டும்.அங்கேயும் ஒரு ஒன்வே.எப்படியோ அதையும் கடந்து ஆற்காடு சாலைக்குள் பைக் நுழைந்தது.
ஆற்காடு சாலை மிகக் குறுகலான சாலை.எப்போதும் டிராபிக் நிரைந்தே இருக்கும்.இவன் இன்னும் கடக்க வேண்டிய தூரம் ஏழு கிலோமீட்டர் இருக்கும்.இந்தச்சாலையிலும் சாலிகிராமத்தில் ஒன்றும் விருகம்பாக்கத்தில் ஒன்றுமாக இரண்டே சிக்னல்கள்தான்.சாலிகிராமம் சிக்னலை வேகமாகவே எவராலும் கடந்துவிட முடியும்.அந்த சிக்னலை பெரும்பாலானவர்கள் பொருட்படுத்துவ்தே கிடையாது என்பது தான் அதற்குக் காரணம்..பைக் சாலிகிராமத்தைக் கடந்து விருகம்பாக்கத்துக்குள் நுழைந்தது.விருகம்பாக்கம் அவனுக்கு மிக பரிச்சயமான இடம்.அவன் ஒரு ஒரு வருட காலத்திற்கு அங்கே வேலை செய்திருக்கிறான்.பைக் நேராக விருகம்பாக்கம் சிக்னலில் போய் நின்றது.அங்கே ஒரு அறுபது நொடி .பின்னர் அவன் மீண்டும் புறப்படத் தொடங்கினான்.ஒரு பத்து நிமிடத்தில் வளசரவாக்கம் .அங்கே சாலையோரத்தில் ஒரு கடையருகே பைக்கை நிப்பாட்டி இறங்கினான்.மணி பத்தாகி ஐந்து நிமிடம் ஆகி இருந்தது.ஜெர்க்கின் ஜிப்பை இறக்கி விட்டுக் கொண்டான்.கடையில் சென்று “ஒரு கோல்டு பில்டர்.ஒரு கேண்டி மேன்.”என்று கூறி மூன்று ரூபாயை நீட்டினான்.கடைக்காரர் மிகுந்த பவ்யத்துடன் இவன் கேட்டதைக் கொடுத்தார்.மிட்டாயை எடுத்து பிரித்து வாயில் போட்டுக் கொண்டான்.சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தான்.சாலையெல்லாம் ஒரே சேறு.மழை மிக மெல்லியதான அழகான சாரலாக விழுந்து கொண்டு இருந்தது.குளிர்ந்த காற்று பட்டு சிகரெட்டில் இருந்து ஒரு பொறி பறந்து வட்டமடித்து சாம்பலாக மடிந்தது.மின்னல் அழகான ஓவியங்களை வானில் வரைந்து கொண்டிருந்தது.சிகரெட்டை இழுத்து புகையை வெளியே விட்டான்.மழை நேரங்களில் புகை மேலெலும்புவது என்பது ஒர் ரம்யமான காட்சிதான்.காற்றில் மேலெலும் புகையை மிகவும் இரசித்தான்.இன்னும் மூன்று கிலோமீட்டர்கள் போயாக வேண்டும்.பைக் மீண்டும் கிளம்பியது.வளசரவாக்கத்தில் சிக்னல் எதுவும் இல்லை.ஆனால் கடப்பதற்கு சற்று நேரமாகும்.மிகவும் குறுகலான சாலை அது.அந்த பகுதிகளில் தெருக்களில் இருந்து சாலையைக் கடக்கும் வாகனங்கள் எப்போதும் வந்து கொண்டிருக்கும்.போதாக் குறைக்கு மாநகரப் பேருந்துகள் வேற.பேருந்து நிறுத்தங்களில் சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்தமாட்டார்கள்.நட்ட நடு ரோட்டிலேதான் நிறுத்துவார்கள்.அதனால் அந்தப் பகுதி எப்போதும் அடர்த்தி மிகுந்தே காணப்படும்.ஒரு இடத்தில் தெருவில் இருந்து சாலையை வண்டிகள் கடக்க வேண்டி மற்ற வண்டிகள் நின்றன.அப்போது பின்னால் வந்த ஒரு பைக் பைக்கின் மேல் மோதியது.இவன் திரும்பிப் பார்த்தான்.பின் முன்னால் திரும்பிக் கொண்டான்.வண்டிகள் கிளம்ப ஆரம்பித்தன.பைக்கும் கிளம்பியது.வளசரவாக்கத்தை கடந்து போரூருக்குள் பைக் நுழைந்தது.அப்பாடா !வந்து சேர்ந்து விட்டோம் என்று ஒரு நிம்மதிப் பெரு மூச்சு விட்டான்.ஹோட்டல் கிராண்ட் ரெசிடென்ஸுக்கு அடுத்து உள்ள ஒரு தெருவில் இவன் திரும்ப வேண்டும்.அந்தத் தெரு இவனுக்கு வலப் புறத்தில் இருந்தது.திரும்புவதற்கான இண்டிகேட்டரைப் போட்டு சாலையைப் பிரிக்கும் அந்த சின்ன மதில் சுவருக்கு அருகே வந்து நின்றான்.அந்தச் சாலையில் இரண்டு லாரிகள் ஒன்றை ஒன்று முந்த முற்பட்டுக் கொண்டு வந்துகொண்டிருந்தது.
அவற்றை செல்ல அனுமதித்து விட்டு,தெருவுக்குள் பைக் நுழைந்தது.
அந்த சந்துக்குள் நுழைந்தவுடன் ஒரு நாய் பைக்கின் குறுக்கே ஓடி வந்தது.நிதானித்த இவன் பலம் கொண்டு ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்தினான்.நாய் இவனைப் பார்த்துக் கொண்டே ஓடிவிட்டது.நாய் மீது எந்த கோபமும் வரவில்லை இவனுக்கு.பைக் கிளம்பியது.பொதுவாக சென்னையின் தெருக்களில் வேகத்தடைகள் அதிகமாக இருக்கும்.இந்தத் தெருவும் அதற்கு விதி விளக்கல்ல.ஒரு நான்கைந்து வேகத்தடைகளை கடந்த பின் அவன் பைக்கை நிறுத்தி இறங்கினான்.கெல்மெட்டை களற்றி எடுத்துக் கொண்டு ஒரு கம்பி போட்ட கேட்டை திறந்து சற்று தாள்வாக இருந்த அந்த வீட்டின் முன் பகுதிக்குள் நுழைந்தான்.தான் அணிந்திருந்த செருப்புகளை கழற்றிவிட்டு கால்களை தரையில் ஊன்றினான்.தரை சில்லென்று இருந்தது.அந்த சில்லிப்பு அவனது உடல் முழுக்க பரவியது.
சிவந்து போன விழிகளுடனும் சோர்ந்து இறங்கியிருந்த தோள்களுடனும் இருந்த அவன் தன்னை வரவேற்க வீட்டில் இருந்து வெளியே வந்த தனது மனைவியைப் பார்த்து சிரித்தவாரே தனது கருப்புப் பையை அவளது கையில் கொடுத்தான்.இலக்கியா குட்டி தூங்கிருச்சா என்று மூன்று வயதான தன் குழந்தையைப் பற்றி கேட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தை அருகே சென்றான்.
மணி பத்து இருபதைத் தாண்டியிருந்தது.