தென் தமிழகங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற குளிர்பானங்களான பவண்டோ மற்றும் டொரினோ இப்போது சென்னையிலும் பரவலாக கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. காளிமார்க் என்ற நிறுவனத்தின் தயாரிப்புகளான இவைகளின் சுவை என்பது சற்று வித்தியாசமானதாக இருக்கும். இவற்றில் கேஸ் கம்மியாக இருக்கும் என்பது இன்னொரு சிறப்பு. தென் தமிழகங்களில் உள்ள மருத்துவர்கள் டொரினோவை பரிந்துரைத்துக் கொண்டிருந்தனர்.

நான் மிகவும் ரசித்துக் குடிக்கும் குளிர் பானங்களில் பவண்டோவும் ஒன்று. மற்ற குளிர் பானங்களை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். ஒரு முறை அதிமாக கோக கோலா குடித்து எனக்கு லிவர் வீங்கிவிட்டது. அந்த நேரத்துல ஒரு மாதத்திற்கு மேல் காய்கள் மற்றுமே உணவு. கோக கோலா மற்றும் பெப்சியைக் கண்டாலே இப்போதெல்லாம் தெனாலிராமன் கதையில் வரும் பூனை போல மிரண்டு ஓடி விடுவேன்.
சமீபத்தில் விருதுநகருக்கு ஒரு குடும்ப விழாவில் கலந்துகொள்வதற்காக போய் இருந்தேன். அங்கே அவர்கள் அனைவருக்கும் கொடுத்த குளிர்பானம் பவண்டோதான்.சென்னையில் வளரசவாக்கத்தில் வழக்கமாக செல்லும் கடை ஒன்றில் டொரினோ பாட்டில் பார்த்தப்போது ரொம்பவே மகிழ்ச்சி அடைந்தேன். பிறகு அசோக் நகரில் தற்செயலாக ஒரு கடைக்குச் செல்லும் போது அழகாக நம்ம பவண்டோ அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. பிறகு நேற்று போருரில் ஒரு கடைக்கு செல்லும்போது பவண்டோவைப் பார்த்தேன். கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்த போது அவர் குளிர் பானம் நன்றாகவே போகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் இருந்து சென்னை வந்தவர்கள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். நானும் குடிச்சுப் பார்த்தேன்.நல்லாவே இருக்கு என்று சொன்னார்.
நான் ஒரு 1.5 லிட்டர் பாட்டில் பவண்டோ வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்தேன்.
படத்திற்கு நன்றி : ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி
பட இணைப்பு : http://flickr.com/photos/mdeii/162348673/
//நான் ஒரு 1.5 லிட்டர் பாட்டில் பவண்டோ வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்தேன்.//
நானும் விரும்பிக் குடிக்கும் பானம். பாட்டிலையாவது கண்ணில் காட்டினீர்கள். நன்றி !
Torino is exceelent for children and patients. I think torino is not the product of kalimark. Fanta and Mirinda nowhere come near to Torino. In my college days some friends criticise me for drinking torino and avoid pepsi&coke. Later they also switched over to torino.
//I think torino is not the product of kalimark.//
இல்லை. டொரினோவும் காளிமார்க் நிறுவனத்தின் தயாரிப்புதான்.
ஊரில் இருந்த வரை பவண்டோ தான், அதுவும் கும்பகோணம் போனால் விஜயா தியேட்ட அடுத்து இருக்கும் இவர்களின் கடைக்கு போய் ரெண்டு பவண்டோவாது குடிச்சிட்டுதான் வருவது, இதை குடித்தவர்களுக்கு மற்ற சுவை பிடிக்காது!
நன்றி
world no one indian drink kalimark, dont use american product pepsi coock