புதைந்து போன சொற்களின்அர்த்தங்களைத் தேடி
புதைந்து கொண்டிருக்கிறேன்.
இதோ சிறிது தூரம் சிறிது தூரம்
எனச் சொல்லி
ஆழமாய்ப் புதைந்து கொண்டிருக்கிறேன்.
என்னைப் போலவே பலர்.
உயிர்ப்பும் உணர்வும் அற்ற
ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது.
மெதுவாகச் சென்று உற்றுப்பார்க்கிறேன்.
திடீரென ஒரு அசைவு
கொண்ட அது மெதுவாய்ப்
புன்னகைத்து கட்டித்தழுவி
நெற்றியில் முத்தமிட்டது.
அது உணர்வோடுதானிருந்தது.
கண்கள் மிளிரச்சொன்னது
நாம்தான் அவைகளின் அர்த்தங்கள் என்று.
தம்பி.. லக்கி ஸ்டைலில் சொல்லுவதாக இருந்தால்… தாவுதீருது…!
என் கருத்து.. முற்றுப்பெறாத சொற்களின் அடுக்கு இது.