
பதிவர்கள் மத்தியில் பல சொற்கள் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக கொலை வெறி, தாவு தீருது, கும்மி போன்ற சொற்களைச் சொல்லலாம். இவை பல்வேறு இடங்களில் பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
‘ கும்மி ‘ என்ற சொல் பெரும்பாலும் எல்லோரும் சேர்ந்து வெட்டியாக பொழுதைக் கழிப்பது அல்லது கூட்டமாக சேர்ந்து கொண்டு எதற்குமே உதவாத விசயத்தை செய்வது என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் மறைமுகமான அர்த்தம் என்னவென்றால் ‘ நாட்டுப்புற கலை வடிவமான கும்மி ஆட்டம் எதற்கும் லாய்க்கில்லாத ஆட்டம் என்பதே ஆகும். கும்மி ஆட்டம் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படும் தமிழர்களின் நாட்டார் கலை. ஆண்களால் ஆடப்படும் கும்மி ஒயில் கும்மி ஆகும் . இதனை ஒயிலாட்டம் என்று நாம் அழைக்கிறோம். அரவாணர்களும் இவ்வாட்டத்தை ஆடுகின்றனர். கும்மி கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள சிறு தெய்வங்களின் கோவில்களில்தான் பெரும்பாலும் இன்று ஆடப்படுகிறது.
நாட்டுப்புறக்கலைகளும் கலைஞர்களும் நறுங்கிக் கொண்டே வருகின்ற சூழல், இன்றைய சூழல். இதுபோன்ற சொல்லாடல்களும் அர்த்தப்படுத்துதல்களும் அக்கலைகளையும் கலைஞர்களையும் கேவலமாகப் பார்க்கக் கூடிய ஒரு மனப்பான்மையை வளர்த்துவிடும். இக்கலைகளை கற்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தையும் குறைத்துவிடும்.
சில சொற்கள் நாம் வாழும் சமூகத்தினால் சில அர்த்தப்படுத்தல்களில் நமக்குக் கற்பிக்கப்படுகின்றன. நாமும் தெரிந்தோ தெரியாமலோ அச்சொற்களை பிரயோகிக்கத் தொடங்கிறோம். பின்னாளில் அதன் உண்மையான அர்த்தத்தையும் அது ஏற்படுத்தும் தாக்கங்களையும் உணர்ந்த பிறகு அவற்றை நாம் பயன்படுத்த நடுங்குகின்றோம். தவிர்த்தும் விடுகின்றோம். அது போலவே ‘ கும்மி ‘ என்ற சொல்லாடலும்.
பாரதி சொன்ன பெண்கள் விடுதலைக் கும்மியில் இருந்து சில வரிகள்
கும்மி யடி! தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!
. . . . . . .
. . . . . . .
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!
. . . . . . .
. . . . . . .
அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.
மிக்க நன்றியுடன்,
நா. கணேசன்
நன்றி கணேசன்.
[...] நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக [...]
http://blog.balabharathi.net/?p=85 தலிவா கொஞ்சம் இந்த பக்கம் வந்து பாருங்க!
)
உங்கள் பக்கப்பட்டை உபுண்டு விளம்பரத்தை முன்னிட்டு –
எனக்கும் விண்டோசைக் காட்டிலும் உபுண்டுவில் இணைய இணைப்பு வேகம் கூடுதலாக இருக்கிறது. இது உண்மையிலேயே வேகமா, இல்லை மனப்”பிராந்தி”யா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களைப் போல் இன்னும் பலரும் உறுதிப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
ரவிசங்கர்,
நான் எனது கணினியில் இரட்டை இயங்குதளங்களை பயன்படுத்துகின்றேன். வின்டோசை விடவும் உபுண்டுவில் நிச்சயமாக இணைய இணைப்பின் வேகம் கூடத்தான் உள்ளது. நண்பர்களது கணினியிலும் வலுக்கட்டாயாமாக உபுண்டுவை நிறுவியும் சோதனை செய்தேன். நிச்சயமாக இரண்டு இயங்குதளங்களிலும் இணைய வேகத்தில் வித்தியாசம் இருக்கிறது.
கும்மி என்பது கூட்டாகச் சேர்ந்து ஆடும் ஆட்டம். அதனால்தான் வலையுலகில் பொழுதுபோக்கிற்காக சேர்ந்து ‘ஆட்டம்’ போடுவதை கும்மி என அழைக்கிறார்கள். இதனாலெல்லாம் புனிதம் கெட்டுவிடாதுங்க. ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பதும் உருவாகுவதும் மொழியின் தன்மைதான்.
சிறில் அலெக்ஸ் ,
// இதனாலெல்லாம் புனிதம் கெட்டுவிடாதுங்க //
என்னைப் பொருத்தவரையில் எதுவுமே புனிதமானது கிடையாது.
இதுபோன்ற சொல்லாடல்கள் அக்கலைகளையும் கலைஞர்களையும் கேவலமாகப் பார்க்கக் கூடிய ஒரு மனப்பான்மையை நமக்குள்ளே வளர்த்துவிடும். இக்கலைகளை கற்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தையும் குறைத்துவிடும் என்பதே எனது கருத்து. இப்படி நாம் தொலைத்த கலைகள் பல இருக்கின்றன.
உங்களது வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒம்போது, குறப்பயல், பறப்பயல், சக்ளியப்பயல் போன்ற வார்த்தைப் பிரயோகமும் கூட சாதாரணமானதுதான், சரியானதுதான்.
ஆனால் உண்மையில் விசயம் அப்படி இல்லை.
//உங்களது வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒம்போது, குறப்பயல், பறப்பயல், சக்ளியப்பயல் போன்ற வார்த்தைப் பிரயோகமும் கூட சாதாரணமானதுதான், சரியானதுதான். //
இவற்றோடு வலைப்பதிவர் கும்மி என்கிற வார்த்தையை ஒப்பிடுவீர்களானால் மேலே சொல்வதற்கு எதுவுமில்லை.
இவை நேரடியாக ஒரு மனிதரை அல்லது இனத்தை தாக்கிவிடுகின்றன. அத்தனைதூரம் கும்மி எனும் வார்த்தை சீரழிக்கப்படவில்லை எனவே நினைக்கிறேன்.
வாழ்க்கையில் சிலவற்றை அனுபவிக்கணும் ஆராயக்கூடாது என பெரியவர் பம்மல் கே சம்பந்தம் சொன்னதுதான் நியாபகத்துக்கு வருது.
“கும்மி” பற்றிய விளக்கவுரை வடிவாக உள்ளது.
நன்றி