சென்னையில் பதிவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடமான கதீட்ரல் சாலையில் உள்ள ஹோட்டல் நியு வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன் இன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசால் கையகப்படுத்தப் பட்டது.
ஹோட்டல் நியு வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்- தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது
ஏப்ரல் 11, 2008 இவான் ஆல்
why?????????
தெரியலை. வழக்கமாக அலுவலகம் சென்று வரும் வழி அது. ஹோட்டலுக்கு முன்னாடி “நீதிமன்ற ஆணைப்படி இது தமிழக அரசுக்கு சொந்தமான இடம்”, என்று ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது. ஒரே போலீஸ் கூட்டம் வேறு. அங்கே யாரையும் அவர்கள் நிற்க விடவில்லை. அதனால் சரியான விபரம் தெரியவில்லை. தகவலைப் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்.
WTF ! சென்னை உருப்பட்ட மாதிரி தான்.
//prashanthan
why?????????
//
அதை வணிக வளாகமா மாத்தி காசு அடிக்கத்தான்
எதுக்காக?
இனி பிபி ஸ்ரீனிவாஸ் எங்க போய் பாட்டு எழுதுவாரு?
எனது யூகம்….
நகரங்களில் ஒருவர் இவ்வளவுதான் வெற்றிடம் வைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தின் கீழ் உட்லண்டஸ் உரிமையாளரிடம் உள்ள அதிகபட்ச நிலம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம்.
அந்த சட்டப்பிரிவிலிருந்து தப்பிக்கவே அதன் அறிவிப்பு பலகையில் உட்லண்டஸ் ஃபார்ம் அல்லது அது போன்ற ஏதோவொன்று எழுதப்பட்டிருக்கும்.
எப்படியாயினும், இத்தனை ஆண்டுகள் ஹோட்டலாக அனுபவிக்கப்பட்டுள்ளதே! அதற்கான அரசின் நட்டத்தை யார் ஈடு செய்வது.