அறை எண் 305இல் கடவுளும் சிம்புதேவனும்
ஏப்ரல் 27, 2008 ஆல் இவான்
அறை எண் 305 இல் கடவுள் படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. படம் நல்ல காமெடியாய் போகும் என்று நினைத்து திரையரங்கிற்குள் போன எனக்கு பேரதிர்ச்சி. படம் எப்படா முடியும் என்கிற உணர்வோடே படத்தைப் பார்க்க வேண்டியிருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு போதனையையே நிகழ்த்தி இருக்கிறார் சிம்புதேவன்.
அவர் ஒரு தத்துவத்தின் பின்புலத்தில் நின்று கொண்டு, அவர் சார்ந்த தத்துவத்தையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல், அந்த தத்துவத்தின் அதிர் தத்துவங்களையும் குறைந்தபட்சம் புரிந்து கொள்ளாமல் ஒரு அரைகுறையான படத்தைத் தந்துள்ளார். சரி, இதுலதான் சரியில்லை, படத்தின் கதை, திரைக்கதை போன்றவற்றிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். அதுவும் அரைகுறை.
இந்த படத்தில் பல இடங்களில் நான் இயக்குனரின் கருத்துக்களோடு முரண்படுகின்றேன்.
படத்தில் கடவுளாக வரும் பிரகாஷ்ராஜ் மூலமாக படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சிம்புதேவன். ஒரு இடத்தில் மனிதன் கண்டுபிடித்த மிக உச்சகட்ட கண்டுபிடிப்பே பிக் பேங் தியரிதான் . அதற்கு மேல் எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. அவற்றை மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது என்று கூறுகிறார்.
மனிதன் தோன்றிய காலம் தொட்டு இன்று வரையில் அவனது அறிவு விரிவடைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் அன்று இருந்த ஒரு உச்சமான அறிவியல் அறிவிற்கு மேல் உள்ள விசயங்களை கடவுளின் செயல் என்று கூறுவதுதான் வழக்கம். இதற்கு பல உதாரணங்கள் கொடுக்க முடியும்.
மனிதனை கடவுள் படைத்தான் , என்பதை அறிவியல் நிராகரித்தது, டார்வினின் தியரி ஆப் எவாலுசனுக்குப் பிறகு.
படத்தில் இன்னோரு இடத்தில் எந்த கடவுள் சார்ந்த தத்துவமும் அன்பைத்தான் பிரதானப்படுத்துகிறது என்று வருகிறது. கடவுள் சார்ந்த தத்துவங்கள் அனைத்தும் பெண்கள் விசயத்தில் தோற்றுப் போய் விடுகின்றன.
ஜாதிக்கும் கடவுள் என்ற கற்பிதத்துக்கும் சம்பந்தமே இல்லையாம் …
அது சரி..நல்ல கதை அம்சம் உள்ள படங்களை மட்டும்தானே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த இயக்குனர் பட்டம் பெற்ற இயக்குனர் சங்கர் தயாரிப்பாராமே. நிஜமாவா ?

இது போன்றதொரு குப்பைப் படத்தை நான் இதுவரை பார்க்கவேயில்லை.இந்த அபத்தக்களஞ்சியத்துக்கு விகடன் வேறு 42% மார்க்குகளை அள்ளித்தந்திருக்கிறது.விகடன் விமரிசனத்தைப் பார்த்துவிட்டுப் படம் பார்க்கப் போகிறார்கள் நிறையப் பேர்.அத்தனை பேரையும் ஏமாற்றிவிட்டது விகடன் கூட.ஒருவேளை சிம்புதேவன் விகடனில் பணி புரிந்தது காரணமாயிருக்கலாம் என்றாலும் விகடன் நீதி தவறிவிட்டது.
சிம்புதேவன் விகடனில் பணி புரிந்தவரா ?
nallaa irunthadhu
///
சிம்புதேவன் விகடனில் பணி புரிந்தவரா ?
///
ஆம், இம்சை அரசன் 23ம் புலிகேசி விகடனில் கார்ட்டூன் நகைச்சுவையாக விகடனின் வெளிவந்தது. சிம்பு தேவன் மாணவ நிருபராக விகடனில் சேர்ந்து பிறகு விகடனில் நிரந்தர பணியில் சேர்ந்தார்.