“ஒருவன் தனக்குள் இருக்கக்கூடிய சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டுமாயின் அச்சிந்தனையின் மீது அவன் கேள்விகளை எழுப்பியாக வேண்டும்.”
- ஜென் தத்துவம்
மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த நான் மெதுவாக மாறத் தொடங்கிக் கொண்டிருந்தேன், எனக்குள் இருந்த சில விசயங்களை நானே கேள்வி கேட்டுக் கொண்டபோது. கல்லூரியில் இளங்கலை இயற்பியல் கற்றுக் கொண்டிருந்த போதுதான் இந்த அநேக மாற்றங்கள் என்னுள் நிகழ்ந்தன. காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்து, நமக்குள் ஏற்றப்பட்ட கருத்துக்களை துரத்தியடிப்பது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல.
என்னுள் பல எண்ணற்ற கேள்விகளை நிரப்பிக் கொண்டு குழம்பிய நிலையில் பல நேரம் சுத்தியிருக்கிறேன். அந்த கேள்விகளுக்கான விடைதேடுதலில் கிடைத்த உறவுகள் ஏராளம். அந்தக் கேள்விகளுள், சிலவற்றுக்குப் பதிலைத் தேடி எடுத்திருக்கிறேன். பலவற்றுக்கான பதில் தேடல் இன்னும் தொடர்ந்த படியே இருக்கிறது. தனக்குள்ளான முரண்பாடு, அதைக் களைவதற்கான முயற்சிகள், முயற்சிகளின் நீட்சியான தேடல். இது தான் நம்மை கடைசி வரைக்கும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு நாள் திடீரென வந்து சேர்ந்தது அந்த மின்னஞ்சல். அருப்புக்கோட்டையிலிருக்கும் தோழர் மதிகண்ணன் அனுப்பியிருந்தார். “Please read and comment” என்ற ஒற்றை வரி உள்ளடக்கத்துடன் ஒரு கோப்பினைப்பு வந்தது. அதில் ஒரு கதை “விரிவாக்கப் பகுதி” என்று. மணல் வீடு சிற்றிதழில் வெளிவந்த அந்த கதையின் சுருக்கம் :
ஒரு இளைஞனை ஊருக்கு நடுவில் உள்ள ஒரு கம்பத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். அந்த இளைஞனின் பெயர் ஏனாதி. அவன் குழந்தை இல்லாத மீள்ச்சாமியுடன் வசித்து வருகிறான். அவர்கள் சொந்த ஊரிலிருந்து இராமநாதபுரத்தில் உள்ள விரிவாக்கப் பகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள். அங்கு மீள்ச்சாமி ஒரு மளிகைக் கடை ஆரம்பித்து ஊரில் நல்ல பெயர் எடுக்கிறார். ஏனாதி ஒரு மாட்டுடன் உடலுறவில் ஈடுபட்டதற்காக அவனைக் கட்டிப் போட்டு விட்டு ,மீள்ச்சாமிக்கு தகவல் சொல்லி அனுப்புகிறார்கள். தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் அங்கு வருகிறார் மீள்ச்சாமி. வந்தவர் ஏநாதியைப் போட்டு அடிக்கிறார். அப்போது ஏனாதி மீள்ச்சாமியைப் பார்த்து, அவர் தான் வீட்டில் இருக்கும் போதே மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டதால்தான் தான் இப்படி செய்ய நேர்ந்ததாகக் கூறுகிறான். இதனை ஒரு கம்பியூட்டர் ஏஐ வைரஸ் கூறுவதாக வருகிறது. இக்கதையைக் கூறிவிட்டு அது சில கேள்விகளை கேட்கிறது.
அப்படி அந்த ஏஐ கேட்ட கேள்விகளில் ஒன்றாக வருவதுதான் “சமூக ஒழுங்கு தனி மனித ஒழுங்கைத் தீர்மானிக்கிறதா? அல்லது தனி மனித ஒழுங்கு சமூக ஒழுங்கைத் தீர்மானிக்கிறதா?” என்ற கேள்வி. இந்த கேள்விக்கான விடை தேடும் படலத்தில் சில புத்தகங்களை வாசித்தலும் அதன் தொடர்ச்சியாக நண்பர்களுடன் கலந்துரையாடலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் இருந்து நான் கற்றுக் கொண்டவைகள் மற்றும் விடை தேடல் அனுபவங்களின் தொடர் பதிவுகள் தான் இவை.
அந்த கதையை பதிவிறக்கி வாசிக்க இங்கே சொடுக்கவும்.
- தேடல்கள் தொடரும்
நான் திருந்தினால் நாடு திருந்தும்? நாடு திருந்தினால் நான் திருந்துவேன்? இந்த கேள்விக்கு எனது வாக்கு இரண்டாவதுக்கே. நாடு திருந்த வேண்டும் அப்போது தான் நாம் நாமாக வாழ முடியும். அதற்கான முயற்சி தான் அறிவகம். நேரம் கிடைக்கும்போது அறிவகத்தை பார்வையிட்டு ஆலோசனைகளை தாருங்கள். அன்புடன் அறிவகம்.
வணக்கம்,
படத்தைப் பார்த்து கவிதைக் கூறுங்கள் எனும் பதிவு இட்டுள்ளேன்.
பதிவர்களும் வாசகர்களும் கவிதைகளை இங்கு சமர்ப்பிக்கலாம். இதோ அதன் சுட்டி :
http://olaichuvadi.blogspot.com/2008/08/blog-post_05.html
இன்றைய இளைய சமுகம் தமது பெற்றோர்கள் காட்டும் வழியில் செல்கிறது அல்லது செல்ல வற்புறுத்தபடுகிறது. நமது பெற்றோர்களை மாற்ற முடியும் ( கடவுள் நம்பிக்கை மற்றும் இன்னும பிற விஷயத்தில்… ) என்று தோன்றவில்லை, ஆனால் இன்று நம்முள் ஏற்படும் நல்ல மாற்றங்கள் நாளைய சமுதாயத்துக்கு ஒரு நல்ல திருப்பமாகவே அமையும்.