வடபழனி பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் மாலை நின்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் எதையோ விநியோகித்துக் கொண்டே வந்தார். அவர் என்ன கொடுத்துக் கொண்டே வருகிறார் என்பதை அறிய பயங்கர ஆவலாக இருந்தது. சிலர் அவர் கொடுத்ததை அவர் நகர்ந்தவுடனேயே கீழே வீசி எரிந்தனர். சிலர் லேசான ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலேயே வைத்திருந்தனர். அவர் மெதுவாக நகர்ந்து என்னருகே வந்து என்னைப் பார்த்தார். சரி கொடுங்கள் என்பது போல நானும் பார்த்துவிட்டு கையை நீட்டினேன். அந்த மனிதர் என்னிடம் ஒரு சிறிய நோட்டீஸ் ஒன்றை கொடுத்தார். அந்த நோட்டீசில் இருந்த கடைசிப் பத்தியை இங்கே தருகிறேன்.
“கர்த்தராகிய இயேசுவே, நீரே சமாதனப் பிரபு. உம்முடைய சமாதனப் பிரபு. உம்முடைய் சமாதானம் எனக்குத் தேவையாயிருக்கிறது. என்னுடைய பாவமே உம்மைவிட்டு என்னைப் பிரிக்கிறது என்பதை நான் அறிவேன். தயவாய் என் பாவங்களை மன்னித்து, உம்முடைய இரத்தத்தினால் என் இருதயத்தை கழுவி சுத்திகரியும். இன்று நான் உம்மை என்னுடைய தேவனாகவும் என் இரட்சகராகவும் எற்றுக்கொள்கிறேன். நீர் என்ன செய்யச் சொன்னாலும் அதைச் செய்யும்படி நான் ஆயத்தமாய் இருக்கிறேன். தயவாய் எனக்கு உதவி செய்தருளும். என்னைக் குணமாக்கும் ஆண்டவரே, உம்முடைய சமாதானத்தை எனக்குத் தாரும். ஆமென்.”
என்ன உங்களுக்கு இதைப் படித்தவுடன் இந்தியா மற்றும் இன்ன பிற மூன்றாம் உலக நாடுகள் பற்றிய நினைப்புதான் வருகிறதா. ச்சே..ச்சே..இது அப்படியெல்லாம் இல்லை.
குறிப்பு : பழைய பதிவு புதுப்பிக்கப்பட்டது
இவான்,
சே.. சே.. எனக்கும் அதே உணர்வு 1..2..3 என மனத்தில் அணுவளவு நேரத்தில் மின்சாரம் என பாய்ச்சுகின்றது.
இதற்குப் பெயர்தான் ”வஞ்சப்புகழ்ச்சி அணி” என சிறுவயதில் படித்ததாய் நினைவு.
அருமை…