
குட்டி மகள்
நான்
தனியாக தேதி கிழிக்கையில்
தனியாக சவரம் செய்து கொள்கையில்
தனியாக உணவு அருந்துகையில்
தனியாக சாலையைக் கடக்கையில்
தனியாக உட்கார்ந்து இருக்கையில்
தனியாக புகைக்கையில்
தனியாக தேநீர் குடிக்கையில்
தனியாக நேரம் பார்க்கையில்
தனியாக மழையில் நனைகையில்
பூத்துக் கொண்டேயிருக்கிறது
குட்டி மகளின் ஞாபகம்.
அழகுக் கவிதை!!
நன்றி ஓவியா …
நெஞ்சைத்தொட்டது..
நன்றி தாமிரா …
இந்த அனுபவம் இனிமையான வலியாகும்..
அன்புடன் அருணா
வருகைக்கு நன்றி அருணா.
Ithu oru Pesum manam
வருகைக்கு நன்றி.
நன்று.