Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘கவிதை’ பகுப்புக்கான தொகுப்பு

நான்
தனியாக தேதி கிழிக்கையில்
தனியாக சவரம் செய்து கொள்கையில்
தனியாக உணவு அருந்துகையில்
தனியாக சாலையைக் கடக்கையில்
தனியாக உட்கார்ந்து இருக்கையில்
தனியாக புகைக்கையில்
தனியாக தேநீர் குடிக்கையில்
தனியாக நேரம் பார்க்கையில்
தனியாக மழையில் நனைகையில்
பூத்துக் கொண்டேயிருக்கிறது
குட்டி மகளின் ஞாபகம்.

முழு பதிவையும் வாசிக்க »

கூட்டுக் கவிதை

பின் வருவது, தோழர் கேகே (கொண்டசாமி) அவர்களின் சமீபத்திய படைப்பான ‘பாரமாய் அழுத்தும் விக்கிரமாதித்யச் சுமை’ எனும் கவிதை தொகுப்பின் முகப்பு அட்டைக்கான கூட்டுக் கவிதை, எனது மற்றும் தோழர் பாரதி சே அவர்களின் வரிகள்…

அட்டைப்படம் – மு.க.பகலவன்
புரண்டு விழும் நிகழ்வுகள்
புறமுதுகின் விலா எலும்புகளை
விகாரமாய் அழுத்த
யுகம் யுகமாய்த் தொடர்கின்றன
படபடத்து உடையும் கனவுகள்.
கனவுகள் குழைத்த வெம்மையில்
தலை நனைத்த தூரிகை,
தீற்றல்களாய் உயிரெழும் நினைவுத்தீ.

முழு பதிவையும் வாசிக்க »

மிதிபடுதலில் வேகமெடுக்கும் பயணங்கள்.

 
மிதிபடுதலில்
வேகமெடுக்கும் பயணங்கள்.
பின்னோக்கிச்
சுழலத் தொடங்குகின்றன
சக்கரங்கள்.
 

முழு பதிவையும் வாசிக்க »

புதைந்து போன சொற்களின்
அர்த்தங்களைத் தேடி
புதைந்து கொண்டிருக்கிறேன்.
இதோ சிறிது தூரம் சிறிது தூரம்
எனச் சொல்லி
ஆழமாய்ப் புதைந்து கொண்டிருக்கிறேன்.
என்னைப் போலவே பலர்.
உயிர்ப்பும் உணர்வும் அற்ற
ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது.
மெதுவாகச் சென்று உற்றுப்பார்க்கிறேன்.
திடீரென ஒரு அசைவு
கொண்ட அது மெதுவாய்ப்
புன்னகைத்து கட்டித்தழுவி
நெற்றியில் முத்தமிட்டது.
அது உணர்வோடுதானிருந்தது.
கண்கள் மிளிரச்சொன்னது
நாம்தான் அவைகளின் அர்த்தங்கள் என்று.

முழு பதிவையும் வாசிக்க »

மெல்லிய மஞ்சள் நிற
விளக்குகள்.
முட்டி தட்டும்
முன் இருக்கைகள்.
பொம்மைகள் போல
மனிதர்கள்.ஜன்னல் வழியே
வழியும் காற்றருவி.
நனைந்து கொண்டே
பயனம் நீள்கிறது.
உன் நினைவுகள் போல.

முழு பதிவையும் வாசிக்க »

நாட்களின் முடிவில்
தொடங்கும் நாட்கள்.
வாகனச் சத்தத்தில்
தொலைந்துபோனது மனசு.
மரம் ஒன்றைக் கூட
காண முடிவதில்லை.
பட்டாம் பூச்சியைப் பார்த்தே
பல நாட்கள் ஆகிவிட்டது.
பேனாவின் கூர்முனைகள்
கையொப்பமிட்டே தேய்ந்து கொண்டிருக்கின்றன.
கறுப்பு நிற சூக்களுக்குள்ளே
மறைந்து கொள்கின்றன கால்கள்.
தூங்கிய பின்னரே
விழித்துக் கொள்கிறது மனசு.
கனவுகளுக்குள்ளே கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறோம்.

முழு பதிவையும் வாசிக்க »

அன்பின் வாசத்தில்
வெடித்துக் கிளம்புகிறது
எனது கவிதை.
குளிர்ந்த காற்றும் நீரும்
அன்பை
எனக்குச் சொல்லிற்று.
நேசத்தின் மணற்பரப்புகளில்
கால்களின் சுவடுகள்
பதித்தோடுகிறது எறும்பு.
மிகச் சூடான நாட்களில்
வெந்மணற் பரப்புகளில்
நானும் எறும்பும்
நடந்திருக்கிறோம்.
தீராத தனிமையின்
இசை கசிந்தோடுகிறது.

முழு பதிவையும் வாசிக்க »