Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘பொதுவானவை’ பகுப்புக்கான தொகுப்பு

இன்று மக்கள் தொலைக்காட்சியில் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தொடர் ஒன்றைப் பார்த்தேன். மக்கள் தொலைக்காட்சி சிறந்த கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறது. அதனால் சில நல்ல விசயங்களையும் தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது.
நிகழ்ச்சியின் ஆரம்பம் தொட்டே சுபாஷின் முகம் மிகப் பழகிப் பேசிச் சிரித்த முகம் போல இருந்தது. இதற்கு முன்பும் சுபாஷினுடைய புகைப்படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு நெருக்கமாக உணர்ந்தது கிடையாது.
சரி இது ஏதாவது பூர்வ ஜென்ம பந்தமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே பாலபாரதியின் [...]

முழு பதிவையும் வாசிக்க »

வடபழனி பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் மாலை நின்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் எதையோ விநியோகித்துக் கொண்டே வந்தார். அவர் என்ன கொடுத்துக் கொண்டே வருகிறார் என்பதை அறிய பயங்கர ஆவலாக இருந்தது. சிலர் அவர் கொடுத்ததை அவர் நகர்ந்தவுடனேயே கீழே வீசி எரிந்தனர். சிலர் லேசான ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலேயே வைத்திருந்தனர். அவர் மெதுவாக நகர்ந்து என்னருகே வந்து என்னைப் பார்த்தார். சரி கொடுங்கள் என்பது போல நானும் பார்த்துவிட்டு [...]

முழு பதிவையும் வாசிக்க »

“ஒருவன் தனக்குள் இருக்கக்கூடிய சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டுமாயின் அச்சிந்தனையின் மீது அவன் கேள்விகளை எழுப்பியாக வேண்டும்.”
- ஜென் தத்துவம்
மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த நான் மெதுவாக மாறத் தொடங்கிக் கொண்டிருந்தேன், எனக்குள் இருந்த சில விசயங்களை நானே கேள்வி கேட்டுக் கொண்டபோது. கல்லூரியில் இளங்கலை இயற்பியல் கற்றுக் கொண்டிருந்த போதுதான் இந்த அநேக மாற்றங்கள் என்னுள் நிகழ்ந்தன. காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்து, நமக்குள் ஏற்றப்பட்ட கருத்துக்களை துரத்தியடிப்பது என்பது லேசுப்பட்ட காரியம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

நேற்று சில நகர்கலைக் கலைஞர்களை வெகுநாட்களுக்கு பின்பு சந்தித்தேன். கே கே நகர் பொன்னம்பலம் சாலையில் உள்ள ஒரு சூப் கடையில் வழக்கம் போல அந்த சந்திப்பு நிகழ்ந்தது. அதே சாலையில் அமைந்துள்ள அவர்களது அறைக்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருக்கும் போது அந்த நண்பருக்கு பின்னால் இருந்த கணிதிரையில் ஒரு நகர்கலைப் படம் ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பேசி முடித்துவிட்டு கிளம்பும் போது அந்த நண்பர் இந்த படத்தப் பாருங்களேன் என்று சொன்னார். அந்த படம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

அறை எண் 305 இல் கடவுள் படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. படம் நல்ல காமெடியாய் போகும் என்று நினைத்து திரையரங்கிற்குள் போன எனக்கு பேரதிர்ச்சி. படம் எப்படா முடியும் என்கிற உணர்வோடே படத்தைப் பார்க்க வேண்டியிருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு போதனையையே நிகழ்த்தி இருக்கிறார் சிம்புதேவன்.
அவர் ஒரு தத்துவத்தின் பின்புலத்தில் நின்று கொண்டு, அவர் சார்ந்த தத்துவத்தையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல், அந்த தத்துவத்தின் அதிர் தத்துவங்களையும் குறைந்தபட்சம் புரிந்து கொள்ளாமல் ஒரு அரைகுறையான படத்தைத் [...]

முழு பதிவையும் வாசிக்க »

சமீபத்தில் வாங்கிய செல்லிடப் பேசியில் உள்ள கேமராவில் படம் பிடித்தது …
தென்னை மரம்

பூக்கள்

செடி

செல்லிடப்பேசி விபரம் : Sony Ericson K550i

முழு பதிவையும் வாசிக்க »

சென்னையில் பதிவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடமான கதீட்ரல் சாலையில் உள்ள ஹோட்டல் நியு வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன் இன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசால் கையகப்படுத்தப் பட்டது.

முழு பதிவையும் வாசிக்க »

பதிவர்கள் மத்தியில் பல சொற்கள் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக கொலை வெறி, தாவு தீருது, கும்மி போன்ற சொற்களைச் சொல்லலாம். இவை பல்வேறு இடங்களில் பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
‘ கும்மி ‘ என்ற சொல் பெரும்பாலும் எல்லோரும் சேர்ந்து வெட்டியாக பொழுதைக் கழிப்பது அல்லது கூட்டமாக சேர்ந்து கொண்டு எதற்குமே உதவாத விசயத்தை செய்வது என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் மறைமுகமான அர்த்தம் என்னவென்றால் ‘ நாட்டுப்புற கலை வடிவமான கும்மி [...]

முழு பதிவையும் வாசிக்க »

தென் தமிழகங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற குளிர்பானங்களான பவண்டோ மற்றும் டொரினோ இப்போது சென்னையிலும் பரவலாக கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. காளிமார்க் என்ற நிறுவனத்தின் தயாரிப்புகளான இவைகளின் சுவை என்பது சற்று வித்தியாசமானதாக இருக்கும். இவற்றில் கேஸ் கம்மியாக இருக்கும் என்பது இன்னொரு சிறப்பு. தென் தமிழகங்களில் உள்ள மருத்துவர்கள் டொரினோவை பரிந்துரைத்துக் கொண்டிருந்தனர்.

நான் மிகவும் ரசித்துக் குடிக்கும் குளிர் பானங்களில் பவண்டோவும் ஒன்று. மற்ற குளிர் பானங்களை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். ஒரு முறை அதிமாக கோக [...]

முழு பதிவையும் வாசிக்க »

வடபழனி பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் மாலை நின்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் எதையோ விநியோகித்துக் கொண்டே வந்தார். அவர் என்ன கொடுத்துக் கொண்டே வருகிறார் என்பதை அறிய பயங்கர ஆவலாக இருந்தது. சிலர் அவர் கொடுத்ததை அவர் நகர்ந்தவுடனேயே கீழே வீசி எரிந்தனர். சிலர் லேசான ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலேயே வைத்திருந்தனர். அவர் மெதுவாக நகர்ந்து என்னருகே வந்து என்னைப் பார்த்தார். சரி கொடுங்கள் என்பது போல நானும் பார்த்துவிட்டு [...]

முழு பதிவையும் வாசிக்க »